Aki.Coach இனுள் புகுபதிகை செய்
Log in using your account on:
Googleஇத்தளத்திற்கு முதன்முறையாக வருகிறீர்களா?
ஒரு கணக்கினை உருவாக்குதல்
- ஆக்கி தளத்தில் பங்குபற்ற நீங்கள் ஒரு கணக்கினை உருவாக்கிக்கொள்ளவேண்டும். இதற்கு
உங்களிடம் ஒரு வேலைசெய்கின்ற மின்னஞ்சல் இருக்கவேண்டும். அவ்வாறு ஒரு
மின்னஞ்சலை நீங்கள் மிக எளிதாக www.gmail.com , www.ymail.com போன்ற
தளங்களில் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம். (ஒரு மின்னஞ்சலை உருவாக்கிக்
கொள்வது இக்காலத்தில் ஒரு இன்றியமையாத தேவையாகவும் இருக்கிறது) - கீழே சொடுக்கும்போது, உங்களுக்கு ஒரு படிவம் தென்படும். அதில் நீங்கள்
பின்வரும் விடயங்களை உள்ளிடவேண்டும். அதன்போது பின்வரும் விடங்களைக்
கருத்திற்கொள்ளவேண்டும். - Username
என்பது உங்களை அடையாளங்காணப் பயன்படும் ஒரு தனிப்பட்ட பெயராகும். ஆகவே
நீங்கள் கொடுக்கும் பெயர் ஏற்கனவே இருந்தால், உங்களால் ஒரு கணக்கை
உருவாக்கமுடியாது. இதற்கு இலகுவான வழி, உங்கள் பிள்ளையின் பெயருடன்
சேர்த்து உங்கள் முதலெழுத்தையும் சேர்த்துக் கொடுக்கலாம். கவனத்தில்
கொள்ள வேண்டிய விடயங்கள்: நீங்கள் Username ஐ உள்ளிடும்போது அதில்
இடைவெளி விடலாகாது.
- Password
ஐ உள்ளிடும்போது மிகக் கவனமாக உங்களால் ஞாபகம் வைத்திருக்கக்கூடிய ஒன்றை
உள்ளிடவும். அந்தப் Password இல் கட்டாயும் ஒரு ஆங்கல எழுத்தும் இலக்கமும்
அடிப்படைப் பாதுகாப்புக் கருதி கட்டாயம் இருக்கவேண்டும். அத்தோடு Password இன் நீளம் எழுத்துகளும் / இலக்கங்களுமாக ஆகக் குறைந்தது 8 ஆக இருக்கவேண்டும். - Email address - உங்கள் மின்னஞ்சல்முகவரியை மிகத் திருத்தமாக உள்ளிடவேண்டும், இருமுறை உள்ளிடவேண்டி இருக்கும்.
- பின்னர் முதற்பெயர் (Firstname), இறுதிப்பெயர் (Lastname), இடம் (City), நாடு போன்ற விடயங்களைக் கவனமாக உள்ளீடு செய்யவேண்டும்.
- நிறைவாக Security Question என்ற பகுதியில் "I'm not a robot' என்பதற்கு முன்னால் உள்ள சிறுபெட்டியில் சொடுக்கவேண்டும். இது கணினிப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இருக்கும் ஒரு
வசதியாகும். - இவற்றைச்
செய்து நிறைவு செய்து 'Create my account' என்பதைச் சொடுக்கினால்
உங்களுக்கான கணக்கு தயாராகும். தயாராகிய கணக்கினை உறுதிப்படுத்துவற்காக
உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்படும். - ஆகவே அடுத்ததாக நீங்கள்
உங்கள் மின்னஞ்சலுக்குள் நுழைந்து கணக்கை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அவ்வாறு உறுதிப்படுத்திய பின்னர் உங்கள் கணக்குத் தயாராகிவிடும். - கணக்கு
உருவாக்குவது எப்படி என்ற காணொளியொன்றை இங்கே காணலாம் (இக்காணொளி வேறொரு
சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்டது, ஆனாலும் உங்களுக்குப் பிரயோசனமாக
இருக்கலாம்):